அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா - இன்றைய
அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவை பாட்டு பாட வைப்பதாக சொல்லி பாட்டி தாத்தாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது எழில் முதல்முறை என்பதால் பதட்டமாக இருக்கிறார். பின் பாக்கியா அதிகமான வேலைகளை பார்த்து முடியாமல் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா கோபியை முறைப்பதை பார்த்து எழில் பாக்கியா எதோ தவறாக நடப்பதாக நினைக்கிறார். பின் எழில் அமிர்தா பாடல் பாட இருக்கிறார் நீங்க இருவரும் பார்க்க வாங்க என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி உனக்கு பாடல் பாட வேற யாரும் கிடைக்கவில்லையா அமிர்தாவிற்கு நிறைய இடம் கொடுக்கிறாய் என சொல்கிறார். நீங்க பார்க்க வாரீங்களா என கெட சரி என ஈஸ்வரியும் தாத்தாவும் கிளம்புகின்றனர். அங்கே அமிர்தா பாட எல்லா ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டுள்ளது.

அமிர்தா சற்று தயக்கத்துடன் இருக்க, ஈஸ்வரி சென்று பாட சொல்கிறார். பின் அமிர்தா பாட வர அவருக்கு முதன்முறை என்பதால் சரியாக பாட முடியவில்லை. அதனால் மீண்டும் மறுவாய்ப்பு கொடுக்க அவரால் சரியாக பாட முடியவில்லை. மியூசிக் இயக்குனர் அதை பார்த்து கடுப்பாக சரியாக பாடுவார் என எழில் நம்பிக்கையாக இருக்கிறார்கள். பின் தாத்தா பாட்டி எழில் அமிர்தா பீச் செல்கின்றனர். அங்கே சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க தாத்தா அமிர்தாவை பாட சொல்கிறார்.

குடித்துவிட்டு கதிர் கண்ணனிடம் ரகளை செய்த ஜீவா, மறுநாள் நக்கலடித்த குடும்பம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது அமிர்தா அருமையாக பாடுவதை கேட்டு தாத்தாவும் பாட்டியும் ரசிக்கின்றனர். மறுபக்கம் பாக்கியா எல்லா வேலைகளையும் செய்து முடியாமல் இருக்கிறார். அப்போது எழிலிற்கு போன் செய்ய எழில் பணத்திற்காக இப்படி எல்லாம் நீ செய்ய வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். இனியா டாக்டர் வர நேரமாகி விட்டதால் தாத்தா வந்துவிடுவாரா என நினைத்து காத்துக் கொண்டிருக்கிறார். ஜெனி அதை எல்லாம் பார்த்து சரியாக இல்லாததை உணர்கிறார்.

பின் தாத்தாவை எழில் அழைத்து வர டாக்டர் வர நேரமாகிவிட்டதாக சொல்கிறார். அப்போதும் டாக்டர் வராமல் இருந்ததால் இனியா ஜெனியிடம் நீங்க எதுவும் அவரை வர வேண்டாம் என சொன்னீங்களா என கேட்கிறார். ஜெனி இல்லை என சொல்ல அப்போது டாக்டர் வருகிறார். உடனே இனியா சந்தோசமாக இருக்கிறார். அப்போது இனியா டாக்டரிடம் சிரித்து சிரித்து பேச ஜெனி கடுப்பாகிறார். பின் இனியா போட்டோ எடுக்க போகிறார்.

பாரதி தான் உன்னுடைய அப்பா என்று கை காட்டும் கண்ணம்மா, சந்தோஷத்தில் லட்சுமி – இன்றைய எபிசோட்!

ஆனால் ஜெனி இனியாவின் போனை புடுங்கி வைக்கிறார். அந்த டாக்டர் கிளம்பிய பின் ஜெனி ஏன் இப்படி சொல்வதை கேட்காமல் இருக்கிறாய் என கேட்கிறார். நீங்க மட்டும் டாக்டரிடம் பேசுறீங்க என இனியா சொல்ல நான் வேற நீ வேற என ஜெனி சொல்கிறார். நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என இனியா சொல்ல, அதை பாக்கியா கேட்டுவிடுகிறார். இனியா அண்ணியிடம் என்ன இப்படி பேசுகிறாய் என கேட்க, பெரிய அண்ணி அவர்களை பேசாமல் இருக்க சொல் என சொல்கிறார். அப்போது பாக்கியா இனியாவை அடித்துவிடுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!