‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சூர்யா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
'சூரரை போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சூர்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
'சூரரை போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சூர்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சூர்யா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு என்றால் வாழ்வில் ஒரே ஒரு முறையாவது தேசிய விருதை வென்று விட வேண்டும் என்பதுதான். இந்நிலையில் 2022 ம் ஆண்டிற்கான அதாவது 68 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற நடிகர் சூர்யா:

ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இசையமைப்பாளர் உட்பட ஏராளமான பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், திரைத்துறையினரின் மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு வருடம் 68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் இருந்து 66 திரைப்படங்களும், 140க்கும் மேற்பட்ட டாக்குமெண்டரி படங்களையும் ஜூரி மெம்பர்கள் பார்த்தனர். அதில் இருந்து சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படும். அதில் இடம்பெற்றுள்ள வெற்றியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் கொரோன காலகட்டத்தில் OTT தளத்தில் வெளியானாலும் மாபெரும் வெற்றியை பெற்றது.

பாக்கியாவை மனம் மாறி வீட்டிற்கு அழைக்கும் கோபி, வர மறுக்கும் பாக்கியா – அடுத்து வருபவை!

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு முதலனோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர். இதை தொடர்ந்து சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!