சன் டிவிக்கு வந்த ‘ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் – புதிய தொடர்!
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சஞ்சீவ் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘கயல்’ என்கிற புதிய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
புதிய தொடர்
பொதுவாக விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட் எல்லாம் தொடர்ந்து விஜய் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அதற்கு மாறுபட்டவாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் நடிகர் சஞ்சீவ் தற்போது சன் டிவி பக்கம் திரும்பியுள்ளார். முன்னதாக குளிர் 100 டிகிரி, நீயும் நானும், உயிருக்கு உயிராக உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சஞ்சீவை, விஜய் டிவியின் பிரபல சின்னத்திரை தொடர்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் ‘ராஜா ராணி’ தொடர் மூலம் சீரியலில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் & கார்த்தி இருவருக்கும் பெண் பார்த்து விடும் கோதை – இன்றைய எபிசோட்!!
இந்த ராஜா ராணி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதையடுத்து படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்ட இருவரும் திருமணம் தொடர் முடிந்ததும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதற்கு பின்பாக நடிகை மானஸா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி 2’ தொடரில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ‘காற்றின் மொழி’ என்ற விஜய் டிவி தொடரில் நடித்து முடித்தார் சஞ்சீவ்.
TN Job “FB
Group” Join Now
தற்போது விஜய் டிவியில் புதிய வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சஞ்சீவ், சன் டிவி பக்கம் திரும்பியுள்ளார். அந்த வகையில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ‘கயல்’ என்ற தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் இவர். இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் அதன் படப்பிடிப்பு துவங்கியது. அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் அந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.