நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஆலியா மானஸா தனது 30வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வரும் நிலையில், அவரது கணவர் தனது காதலை சொல்லி சர்பிரைஸ் கொடுத்த வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆலியா மானஸா:

தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆலியா மானஸா. வெள்ளித்திரையில் அறிமுகமாகி விஜய் டிவி சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமான ஆலியா மானஸாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள். அந்த வகையில் சமூக வலைதளங்களில் மட்டும் இவரை லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இப்படி சீரியலில் நடித்து புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகை ஆலியா மானஸா, தன்னுடன் நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு கோலாகலமான முறையில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

இதற்கிடையில், நடிகை ஆலியா மானஸா தனது 2வது குழந்தையின் பிறப்பிற்காக ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு சமீபத்தில் விலகினார். அந்த வகையில் பிரசவத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்பாக வரை இவர் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது. இப்போது ஆலியா மானஸாவுக்கு பதிலாக அந்த சீரியலில் ரியா என்பவர் நடித்து வருகிறார். இப்படி இருக்க ஷூட்டிங், சீரியல் என்று எந்தவொரு கமிட்மென்டும் இல்லாத பட்சத்தில் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஆலியா மானஸா.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது நடிகை ஆலியா மானஸா மற்றும் நடிகர் சஞ்சீவின் திருமண நாளை முன்னிட்டு இருவரும் தங்களது குடும்பத்தாருடன் ஊட்டி சென்று கொண்டாடி வருகின்றனர். இதனுடன் ஆலியா மானஸாவின் 30வது பிறந்த நாள் விழாவையும் அவர்கள் கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது ஆலியா மானஸாவின் காதில் நடிகர் சஞ்சீவ் ‘ஐ லவ் யூ’ என்று செல்லமாக கூற அதற்கு அவர் வெட்கப்படுவது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here