‘பிக்பாஸ்’ சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
'பிக்பாஸ்' சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
'பிக்பாஸ்' சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
‘பிக்பாஸ்’ சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான சஞ்சீவ் ஒரு சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சஞ்சீவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தவர் நடிகர் சஞ்சீவ். தமிழ் சின்னத்திரை தொடர்களில் முன்னணி நடிகராக வலம் வந்த சஞ்சீவ் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா மூக்கை உடைத்த தனம், மூர்த்தி – வைரலாகும் மீம்ஸ்!

இது தவிர ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நேற்று ‘அன்பறிவு’ திரைப்படம் சார்பில் கலந்து கொண்ட இயக்குநர் அஸ்வின், சஞ்சீவின் உறவினர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட சஞ்சீவின் அக்கா சிந்து ஒரு நடிகை ஆவார். அதாவது நடிகர் விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளாவின் சகோதரி ஷியாமளாவின் மகள் தான் சிந்து. இவரின் தம்பி தான் நடிகர் சஞ்சீவ். நடிகை சிந்து, நடிகர் அருண்பாண்டியன் மற்றும் ராம்கி நடிப்பில் உருவான ‘இணைந்தகைகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!

தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்மி, கிரி, பிஸ்தா, ஐயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முத்திரை பதித்துள்ளார். இது தவிர ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகை சிந்து 1995ம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆரம்பம் முதலே ஆஸ்துமா வியாதியால் கஷ்டப்பட்டு வந்த இவர், சுனாமியால் அவதிப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட சென்ற இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார் நடிகை சிந்து.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!