பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!

0
பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி - 'பாரதி கண்ணம்மா' அடுத்த எபிசோடு!
பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி - 'பாரதி கண்ணம்மா' அடுத்த எபிசோடு!
பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தனது துணியை துவைத்ததாக கண்ணம்மா மீது பழி சொல்லி கோபப்படும் பாரதிக்கு, வாய்தா வடிவுக்கரசி அட்வைஸ் செய்வது போல சில காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

கடந்த சில எபிசோடுகளுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட வாய்தா வடிவுக்கரசி கதாப்பாத்திரம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இந்த சீரியலில் இதுவரை கண்ணம்மாவுடன் 6 மாத காலம் சேர்ந்து வாழ மாட்டேன் என பாரதி அடம் பிடித்து வர அவருக்கு பாடம் புகட்டும் விதமாக சௌந்தர்யா ஏற்படுத்தின ஆள் தான் இந்த வடிவுக்கரசி கதாப்பாத்திரம். அந்த வகையில், தான் வந்ததுக்குரிய காரணத்தை சிறப்பாக நடத்தி வரும் வடிவுக்கரசி ஒவ்வொரு எபிசோடிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் இன்றைய எபிசோடிலும் இந்த வடிவு கதாப்பாத்திரம் சில முக்கியமான விஷயங்களை செய்ய இருக்கிறது. அதாவது, பாரதியின் துணி மொத்தமும் துவைத்து மடித்து வைத்திருப்பதை பார்க்கும் பாரதி அதை கண்ணம்மா செய்ததாக சொல்லி அத்தனையும் கசக்கி கீழே வீசி விடுறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வீட்டுக்கு வரும் வடிவு, அது கண்ணம்மா செய்யவில்லை என சொல்லிவிட்டு, இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் சந்தேகப்படுவது நல்லது இல்லை. ஒரு பிரச்சனை என்றால் அதில் இரு தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். தான் கேட்டது தான் உண்மை என்று நம்ப கூடாது.

பாரதி கண்ணம்மா தொல்லை தாங்க முடியவில்லை, கதறிய ரசிகர் – பதில் கொடுத்த வில்லி வெண்பா!

இப்படி தான் பல பேரிடம் நடந்திருப்பீர்கள் என்று சொல்கிறார். பிறகு அதை மாற்றி கொள்ளுமாறு அட்வைஸ் கொடுக்கிறார் வடிவு. இதை கேட்டு விட்டு பாரதி அங்கிருந்து கிளம்ப, டாக்டர் சார் என கூப்பிடும் கண்ணம்மா, கீழே வீசி எறிந்த துணி அத்தனையையும் எடுத்து மடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார். தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டதாக வருந்தும் பாரதி துணிகளை மடிக்க ஆரம்பிக்கிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடின் சிறப்பு வீடியோவாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!