விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா மூக்கை உடைத்த தனம், மூர்த்தி – வைரலாகும் மீம்ஸ்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா மூக்கை உடைத்த தனம், மூர்த்தி - வைரலாகும் மீம்ஸ்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா மூக்கை உடைத்த தனம், மூர்த்தி - வைரலாகும் மீம்ஸ்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா மூக்கை உடைத்த தனம், மூர்த்தி – வைரலாகும் மீம்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்து வந்த கயல் பாப்பாவின் பிறந்த நாள் விழா காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் மீனாவை கலாய்த்து பல மீம்கள் வரத் தொடங்கியுள்ளது.

வைரல் மீம்கள்:

இணையம் என்பது சில வருடங்களுக்கு முன்பு வரை அபூர்வமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து வீடுகளிலும் இணையத்தின் தேவை அதிகரித்து விட்டது. இணைய பழக்கம் அதிகரிக்க தொடங்கிய பிறகு மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டது. சில வருடங்களாக மீம் கலாட்டாக்கள் இணையத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் புகைப்படம் மற்றும் தகுந்த சினிமா வசனங்களின் மூலம் கிண்டல் செய்வது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக தொடங்கியது.

பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் மிகவும் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமலும் இருப்பார்கள். ஆனால் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மீனா ஜீவாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்து விடுவார். ஆரம்பத்தில் இருந்து மூர்த்தி குடும்பத்துடன் மீனா ஒட்டாமல் தனது வீட்டினரையே பெருமையாக பேசி வருவார். இந்நிலையில் ஜீவா, மீனா ஜோடிக்கு பிறந்த கயல் பாப்பாவின் முதல் பிறந்த நாள் வருவதற்கு முன்பாகவே மீனா அதை பற்றி கனவு கண்டு வருவார்.

கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

இந்த வார பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் கயல் பிறந்த நாள் கொண்டாட்டம் வர இருக்கிறது. அதில், மீனாவின் அப்பா கயல் பாபாவிற்கு வளையல், செயின் என்று தங்க நகைகளை பரிசாக கொடுப்பார். இதனால் மீனா ஜீவாவிடம் வந்து எங்க அப்பாவை பார்த்தியா என்னலாம் செய்றாங்க, ஆன உன் வீட்ல என்ன செய்ஞ்சாங்க என்று கேட்கிறார். ஆனால் அதன் பிறகு கயலுக்கு தங்க நகை, போஸ்ட் ஆபிஸில் முதலீடு என்று மூர்த்தியும், தனமும் கலக்குகிறார்கள். இதனால் மீனாவை கலாய்க்கும் விதமாக ரசிகர்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!