விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகியுள்ளார். இதனால் சீரியல் குழுவினர் உட்பட ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விலகல்:
சின்னத்திரையின் பொழுது போக்கின் ஒரே வழிகாட்டலாக இருந்து வரும் சீரியல்களின் நடிகர், நடிகைகள் அதிக அளவில் மக்கள் மனதில் பதிந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் அமைந்து விடுகிறது. இதனால் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் சீரியல் கதாபாத்திரங்களை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். இதனால் தான் சீரியல் கதாபாத்திரங்கள் தேர்வு என்பது மிக முக்கிய இடத்தை பிடித்து உள்ளது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகர்கள் அதிக அளவில் மாற்றம் செய்யப்படுகிறார்கள். இதனால் முக்கிய கதாபாத்திரங்களில் மாற்றங்கள் நடக்கிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா தொடரில் கதையின் நாயகியான கண்ணம்மா முதல் அவரின் தங்கை அஞ்சலி கதாபாத்திரம் வரை பல முக்கிய பிரபலங்கள் மாறினார்கள். இதனால் சீரியலின் ரேட்டிங் எந்த வித பாதிப்பையும் அடையவில்லை என்பது உண்மை தான். கதையின் போக்கிற்காக தான் பலரும் சீரியலை ரசித்து வருகிறார்கள்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வீட்டை விட்டு விரட்டப்பட்ட இனியா – ரசிகர்கள் ஷாக்!
ராஜா ராணி 2 சீரியலில் நாயகி ஆல்யா தற்போது நிறை மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் சீரியலை விட்டு விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சந்தியாவின் அண்னன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சல்சா மணி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சன் டிவியின் தெய்வமகள் சீரியல் சுரேஷ் தான் அந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த திடீர் மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.