‘அம்மன்’ சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

0
'அம்மன்' சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!
'அம்மன்' சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!
‘அம்மன்’ சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

கலர்ஸ் தமிழ் டிவியின் நட்சத்திர காதல் ஜோடியான நடிகர் அமல்ஜித் மற்றும் நடிகை பவித்ரா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திருமணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை முதன் முறையாக தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.

அம்மன் சீரியல்

சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் காதல் திருமணம் செய்துகொண்டு வருவதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். அந்த வகையில் விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை வைஷாலி, ‘பாக்கியலட்சுமி’ நடிகர் ஆர்யன் மற்றும் ‘செம்பருத்தி’ ஷபானா, ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ நடிகர் மதன் மற்றும் ரேஷ்மா, கலர்ஸ் ‘திருமணம்’ நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா, ‘தமிழும் சரஸ்வதியும்’ நடிகை நக்ஷத்ரா என பல பிரபலங்கள் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

பாக்கியா, இனியவை விசாரிக்கும் போலீஸ் & கோவத்தில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த எபிசோட்!

இப்படி கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமணங்கள் இந்த ஆண்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபலங்களின் திருமணத்தில் அடுத்ததாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருவது கலர்ஸ் டிவியின் ‘அம்மன்’ சீரியல் ஜோடியான அமல்ஜித் மற்றும் பவித்ராவின் திருமணம் தான். கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகர் அமல்ஜித் மற்றும் கர்நாடகாவை சொந்த ஊராக கொண்ட நடிகை பவித்ரா இருவரும் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘அம்மன்’ சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களது ரீல் காதல், ரியல் காதலாக மாற, இருவரும் காதலிக்கும் விஷயத்தை சில மாதங்களுக்கு முன்னாக அறிவித்தனர். தொடர்ந்து பொது இடங்களில் அவ்வப்போது ஜோடியாக சுற்றி திரியும் இந்த காதல் ஜோடிக்கு எப்போது திருமணம் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. அதாவது, ‘அம்மன்’ சீரியல் ஒளிபரப்பாகி தற்போது 1000 எபிசோடுகளை கடந்திருக்கும் நிலையில், சீரியல் குழுவினர் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் “சரவணன் மீனாக்ஷி சீசன் 4” – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த கொண்டாட்டத்தின் போது ஜோடியாக கலந்து கொண்ட அமல்ஜித் மற்றும் பவித்ரா இருவரும் தங்களது திருமணம் குறித்த சில தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். அதாவது அமல்ஜித் மற்றும் பவித்ரா இருவருக்கும் இந்த ஆண்டு அதாவது 2022ம் ஆண்டு திருமணம் இல்லை என்றும் 2023 அல்லது 2024ம் வருடத்தில் இவர்களது திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் அவர்களது ரசிகர்களுக்கு சற்றே வருத்தத்தை கொடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!