தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

0
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

நெடுஞ்சாலை திட்டங்கள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மேலும் சிறப்பிக்கும் வகையில் அரசு பல புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. மேலும், இவை வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் முழுமையாக நடைமுறைக்கு வந்து அதன் மூலம் அனைத்து மக்களும் பயன் அடைய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் விரைந்து எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

ஃபாலோயர்களுக்கு தெரியாமல் அவர்களை நீக்கும் அம்சம் – ட்விட்டரில் புதிய வசதி!

அங்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியார்களை தமிழக அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 500 கி.மீ தூரம் அமைக்கப்படும் வரும், சாலை பணியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கணூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் ஆகிய சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

மதுரை, கோவை மாநகரில் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சியை சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவில் சுங்கச்சாவடி இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம் மற்றும் சூரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். திருச்சியில் பேருந்து முனையம் அமைக்க வேண்டும். கோவையில் எல் அண்ட் டி கட்டுப்பாட்டில் உள்ள 22 கி.மீ தொலைவு சாலை இருவழி சாலையாக உள்ளது. அதனையும் நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!