நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸு – வெளியான வீடியோ!

0
நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த
நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன், ஐஸு - வெளியான வீடியோ!
நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸு – வெளியான வீடியோ!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விஜே தீபிகா, சரவண விக்ரம் இருவரும் இணைந்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜே தீபிகா. அவர் முகப்பரு பிரச்சனை காரணமாக அந்த சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன் பின் அவர் பல யூடுப் சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரது ரசிகர்கள் கண்ணனுக்கு நீங்க தான் பொருத்தமான ஜோடி, மீண்டும் ஐஸ்வர்யாவாக வாங்க என கமெண்ட்களை செய்து வந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக சீரியலில் இருந்து விலகினாலும் விஜே தீபிகா, சரவண விக்ரமாக தொடர்ந்து எங்கள் யூடுப் சேனலில் வீடியோ வெளியிடுவோம் என தெரிவித்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் ஷகிலா மகள் மிளா இல்லையா? ரசிகர்களுக்கு செம ஷாக்!

தற்போது அவர்கள் இருவரும் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களாக இருவரையும் ஒன்றாக பார்க்காத ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் சாப்பிட செல்வது போலவும், அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி டயலாக் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!

மேலும் நீண்ட நாட்களுக்கு பின் இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி சூப்பர், மீண்டும் சீரியலுக்கு வாங்க என கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். அவர் தன்னுடைய நடிப்பை நன்றாக வெளிக்காட்டி வந்தாலும் பழைய ஐசு தான் கண்ணனிற்கு நல்ல ஜோடி என ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் உங்களது சப்போர்ட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விஜே தீபிகா தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!