தமிழகத்தில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் – கோவை முதலிடம்!! அரசின் நடவடிக்கை என்ன?

0
தமிழகத்தில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் - கோவை முதலிடம்!! அரசின் நடவடிக்கை என்ன?

தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலை விபத்து:

தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்தினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்துக்களை தவிர்ப்பதற்காக அரசின் சார்பில் ஏகப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற சாலை விபத்துகளின் கணக்கிட்டின்படி சென்னை தான் முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது.

TN TET  தேர்வில் பாஸ் ஆவது ரொம்ப சுலபம் – இப்படி தயாராகுங்க!

அதில் சென்னை மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி தற்போது கோவை மாவட்டம் அதிக உயிரிழப்புகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி காரணமாக பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் மாவட்டத்தில் மட்டுமே கடந்த ஒரு ஆண்டில் 1040 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!