கர்ப்பமாக இருக்கும் “அபி டெய்லர்” சீரியல் ரேஷ்மா? அவரே சொன்ன விளக்கம்! வைரலாகும் வீடியோ!

0
கர்ப்பமாக இருக்கும்
கர்ப்பமாக இருக்கும் "அபி டெய்லர்" சீரியல் ரேஷ்மா? அவரே சொன்ன விளக்கம்! வைரலாகும் வீடியோ!
கர்ப்பமாக இருக்கும் “அபி டெய்லர்” சீரியல் ரேஷ்மா? அவரே சொன்ன விளக்கம்! வைரலாகும் வீடியோ!

கலர்ஸ் தமிழ் டிவியில் “அபி டெய்லர்” சீரியலில் ஒன்றாக நடித்து வரும் ரேஷ்மா மதன் ஜோடி தங்களுடைய காதல் மற்றும் திருமண பயணத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

ரேஷ்மா மதன் ஜோடி:

தமிழ் சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்தவர்கள் ரேஷ்மா மற்றும் மதன். மதன் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் ரேஷ்மா முதலில் ஒரு நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின் நடிப்புத்துறைக்கு வந்தவர். பூவே பூச்சூடவா சீரியல் நல்லபடியாக முடிந்துள்ள நிலையில், தற்போது இருவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் ஜோடியாக நடிக்கின்றனர்.

கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “அபி டெய்லர்”. இந்த சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தாலும், தற்போது வரை இருவரும் எலியும் பூனையுமாக தான் இருக்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா வில்லி பரீனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்களுடைய காதல் பயணம் மற்றும் திருமண பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர்.

அப்போது அவர்களிடம் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது . அதில் மதனிற்கு பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. அதனால் அவர் என்னை இப்படி மாட்டிவிட்டீங்க என நகைச்சுவையுடன் பதில் அளித்து இருந்தார். ரேஷ்மா கர்ப்பமாக இருக்கிறாரா என ஆங்கர் கேட்ட கேள்விக்கு எல்லாருக்கும் இதே கேள்வியாக தான் இருக்கிறது என சொன்ன அவர் அப்படி எல்லாம் இருந்தால் கண்டிப்பாக சொல்வோம் என சொல்லி இருக்கிறார். மேலும் ஷபானா ஆர்யன் பற்றி கேட்டதற்கு அவர்கள்சந்தோசமாக இருக்கிறார்கள் என பதில் அளித்து இருக்கிறார்கள், இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!