ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!
தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.03.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | வேலூர் ஆவின் |
பணியின் பெயர் | கால்நடை ஆலோசகர் |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
AAVIN காலிப்பணியிடங்கள்:
கால்நடை ஆலோசகர் எனப்படும் Veterinary Consultant பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Veterinary Consultant கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்
AAVIN சம்பள விவரம்:
Veterinary Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் பற்றிய விவரங்கள்:
தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் 23.03.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நிர்வாக அலுவலகம், வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், சத்துவாச்சாரி, வேலூர்-632009 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.