இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!  

0
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!  

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
பணியின் பெயர் Consultant, Junior Consultant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2024, 28.01.2024
விண்ணப்பிக்கும் முறை Email ID

AAI காலிப்பணியிடங்கள்:

AAI நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணிக்கென 01 பணியிடமும், Junior Consultant பணிக்கென 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கான தகுதி:

Consultant (Clinical Psychologist) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Psychology, Clinical Psychology பாடப்பிரிவில் Post Graduate Degree, MA, M.Phil தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Junior Consultant பணிக்கு AAI, IFA நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் E5 / E4 / E3 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் General Manager, Senior Manager, Manager பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

Consultant வயது வரம்பு:

Junior Consultant பணிக்கு 70 வயது எனவும்,

Consultant (Clinical Psychologist) பணிக்கு 65 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

AAI ஊதியம்:

Junior Consultant பணிக்கு ரூ.50,000/- என்றும்,

Consultant (Clinical Psychologist) பணிக்கு ரூ.75,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

AAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Document Verification, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த AAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Consultant – 25.01.2024

Junior Consultant – 28.01.2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!