ஆதார் அட்டையை எத்தனை முறை அப்டேட் செய்யலாம்? – UIDAIன் கட்டுப்பாடுகள் இதோ!

0
ஆதார் அட்டையை எத்தனை முறை அப்டேட் செய்யலாம்? - UIDAIன் கட்டுப்பாடுகள் இதோ!

மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கும் நிலையில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை நீங்கள் எத்தனை முறை மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை

இந்திய மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. எனவே அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு இல்லாமல் ஏதாவது மாறி இருந்தால் நீங்கள் அதனை ஆன்லைன் மூலமாக மாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆதாரில் எத்தனை முறை விவரங்களை மாற்றலாம் என யாருக்கும் தெரிவதில்லை. ஆதாரில் விவரங்களை மாற்றவும் அல்லது அப்டேட் செய்யவும் சில குறிப்பிட்ட வரம்புகள் இருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு மேலும் 100 கம்பெனி ஆயுதப்படையினர் – தேர்தல் ஆணையம் உத்தரவு!

இதுகுறித்து UIDAI வெளியிட்ட அறிவிப்பின்படி ஆதார் சம்பந்தப்பட்டுள்ள சில கட்டுப்பாட்டுகளை பாக்கலாம். ஆதாரில் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். முகவரியை மாற்ற எந்தவித லிமிட்டும் இல்லை, ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மாற்றலாம், ஆதார் அட்டையில் பாலின விவரங்களை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும், உங்களுடைய புகைப்படத்தை எந்தவித லிமிட்டும் இல்லாமல் மாற்றலாம், அத்தியாவசிய தேவைகளுக்காக பிறந்த தேதி பாலினம் பெயர் ஆகியவற்றை அப்டேட் செய்ய எக்செப்ஷன் ஹேண்ட்லிங் ப்ரோசீஜர் எனப்படும் சிறப்பு செயல்முறையை பின்பற்ற வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!