ஆதார் கார்டில் பிறந்த தேதியை புதுப்பித்தல் – சுய சேவை போர்டல்!

3
ஆதார் கார்டில் பிறந்த தேதியை புதுப்பித்தல் - சுய சேவை போர்டல்!
ஆதார் கார்டில் பிறந்த தேதியை புதுப்பித்தல் - சுய சேவை போர்டல்!
ஆதார் கார்டில் பிறந்த தேதியை புதுப்பித்தல் – சுய சேவை போர்டல்!

ஆதார் அட்டையில் உங்களது விவரங்களை அப்டேட் செய்ய சுய சேவை புதுப்பிப்பு போர்டல் (SSUP) என்ற சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவற்றை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார் அப்டேட்:

பொதுவாக ஒவ்வொருவரது ஆதார் அட்டைகளையும் அடிக்கடி புதுப்பிப்பது அவசியமாகும். முன்பெல்லாம் இத்தகைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு ஆதார் மையங்களை தேடி சென்று, மற்றவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆனால் தற்போது அனைவரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் மூலமாக ஆதார் சேவைகளை வீட்டிலி இருந்தபடியே எளிதாக பெற்றுக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ முடியும்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ஆதார் அட்டையில் உங்களது தகவல்களை அப்டேட் செய்ய, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சுய சேவை புதுப்பிப்பு போர்டலை (SSUP) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி ஆதார் அட்டையில் பல தகவல்களை மாற்றி கொள்ளலாம். எனினும் இந்த கோரிக்கைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை வைத்திருப்பவர் அவரது பெயரை இரண்டு முறையும், பாலினம், பிறந்த தேதி (DoB) உள்ளிட்டவற்றை ஒரு முறையும் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆதார் அட்டையில் DoB விவரங்களை புதுப்பிக்க,
  • முதலில் https://ssup.uidai.gov.in/ssup/ ல் உள்ள UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • பிறகு proceed to update Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.
    தொடர்ந்து உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
  • பிறகு Send OTP விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP ஐ உள்ளிட்டு, உங்கள் புள்ளிவிவர தரவை புதுப்பிக்க துவங்கலாம்.
  • அதில் உங்களது பிறந்த தேதி தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு DoB இன் தற்போதைய verify செய்யப்படாத ஆவணங்களை பதிவேற்றவும்.
  • பின்பு மாற்றங்களை சமர்ப்பித்து மதிப்பாய்வு செய்யவும்.
  • கடைசியாக உங்களுக்கு கொடுக்கப்படும் URN மூலம் ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை சரிபார்த்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!