ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள முகவரியை தேவைப்பட்டால் மாற்றலாம். தற்போது ஆன்லைன் மூலம் முகவரி மாற்றும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் கார்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வேலைகளுக்கும் அரசு வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். தங்களின் தனிப்பட்ட விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியை UIDAI அமைப்பு வழங்குகிறது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – மார்ச் மாதத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் அறிவிப்பு!

அந்த வகையில் பெயர், முகவரி, பிறந்த வருடம் போன்ற விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம். அஞ்சலம், ஆதார் சேவை மையம் போன்ற இடங்களில் ஆதார் கார்டில் திருத்தங்களை செய்யலாம். அதனை தொடர்ந்து வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலமாக விவரங்களை மாற்றலாம். அதன்படி தற்போது ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 • முதலில் http://uidai.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதத்திற்கு செல்ல வேண்டும்.
 • அதில் My Aadhaar என்பதை கிளிக் செய்து Update Demographics Data Online என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 • ‘Proceed to Update Aadhaar’ பட்டனை கிளிக் செய்து மாற்றப்பட வேண்டிய தகவலை பதிவிடவும்.
 • ‘Send OTP’ பட்டனை கிளிக் செய்யவும் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP பெற்று அந்த எண்ணை பதிவிட வேண்டும்.
 • தேவையான ஆவணங்களின் நகல் படங்களை அப்லோட் செய்து Submit கொடுக்கவும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!