Whatsapp குரூப்பில் வந்துள்ள புது வித அப்டேட் – மற்றவரின் செய்தியை அட்மின் நீக்கலாம்!

0
Whatsapp குரூப்பில் வந்துள்ள புது வித அப்டேட் - மற்றவரின் செய்தியை அட்மின் நீக்கலாம்!
Whatsapp குரூப்பில் வந்துள்ள புது வித அப்டேட் - மற்றவரின் செய்தியை அட்மின் நீக்கலாம்!
Whatsapp குரூப்பில் வந்துள்ள புது வித அப்டேட் – மற்றவரின் செய்தியை அட்மின் நீக்கலாம்!

வாட்ஸ்ஆப் செயலியில் பலவித அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், குரூப்பில் மற்றவர் அனுப்பும் செய்தியை அட்மின் யாருக்கும் தெரியாமல் டெலிட் செய்யும்படியான அப்டேட் கூடிய விரைவில் வர இருக்கிறது.

Whatsapp அப்டேட்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. கடந்த மூன்று வாரத்தில் மட்டுமே எக்கச்சக்கமான அப்டேட்கள் வெளிவந்துவிட்டது. இதற்கு பிறகும் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட தயாராக இருக்கிறது. அதாவது, வாட்ஸ்ஆப் குரூப்பில் சில அப்டேட்களை கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாட்ஸ்ஆப்பில் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

தற்போது ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 256 பயனர்கள் வரைக்கும் இருக்கலாம் என வாட்ஸ்ஆப் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு பிறகு வாட்ஸ்ஆப் குரூப்பில் அவசியமில்லாமல் ஏதேனும் செய்தி பகிரப்பட்டால் அந்த செய்தியை குரூப் அட்மின் நீக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேற விரும்பினால் அமைதியாக யாருக்கும் தெரியாமல் விலகிக்கொள்ளும்படியான அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.26) மாதிரித்தேர்வு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தற்போது குரூப் அட்மின் ஒருவரின் செய்தியை யாருக்குமே தெரியாமல் Delete For everyone செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அப்டேட் வெளியாகும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் status முறையிலும் சில அப்டேட்களை வெளியிட வாட்ஸ்ஆப் காத்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த அப்டேட்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!