இந்தியாவில் 5G சேவைகளில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

1
இந்தியாவில் 5G சேவைகளில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் 5G சேவைகளில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் 5G சேவைகளில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியார் இடத்தில் கேபிள் பதிக்க வேண்டுமெனில் அதற்குரிய அரசு அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் தற்போது இந்த விதியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிப்பதற்கோ, தனியார் சொத்துக்களில் மொபைல் டவர் அமைப்பதற்கு அந்த தனியார் நிறுவனத்திடமும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமது பெற வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 5ஜி சேவைகளை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல இந்த விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிப்பதற்கோ, தனியார் சொத்துக்களில் மொபைல் டவர் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்திடமும் மற்றும் நிலத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

ஆனால் அதே சமயத்தில் ஒரு தனியார் கட்டிடம் அல்லது கட்டமைப்பில் மீது மொபைல் டவர் அமைப்பதற்கு முன்பாக தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிய அதிகாரிகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் மொபைல் டவர் அமைக்க முன்மொழியப்பட்ட கட்டிடத்தின் விவரங்கள், உரிய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட பொறியாளரின் சான்றிதழின் நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. It is not correct and the same way they will ask for 5G to purchase separate phone and they will sell or give to other country to run so government is not thinking properly and why the government departments is required and all the ministry can handle with inexperienced and uneducated minister so that the government employees can be send by valentry retirement so that the government need not pay pension and where it will go God only knows

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!