நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC India) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Industrial Trainee / SME & Technical (O&M), Industrial Trainee (Mines & Mines Support Services) ஆகிய பணிகளுக்கென மொத்தமாக 239 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (19.04.2024) முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
NLC India வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Industrial Trainee / SME & Technical (O&M), Industrial Trainee (Mines & Mines Support Services) ஆகிய பணிகளுக்கென மொத்தமாக 239 பணியிடங்கள் NLC India நிறுவனத்தில் காலியாக உள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Diploma அல்லது ITI தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.
- 01/03/2024 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல்!
- இந்த NLC India நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.14,000/- முதல் ரூ.22,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
NLC India விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் www.nlcindia.in என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.04.2024 அன்று வரை மட்டுமே இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link