நடப்பு நிகழ்வுகள் – 09 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 09 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 09 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 09 ஜூன் 2023

தேசிய செய்திகள்

குருகிராமில் உள்ள “ஹுடா சிட்டி சென்டர் மற்றும் சைபர் சிட்டி” இடையே புதிய மெட்ரோ பாதை அமைக்கும் திட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி வரை தடையின்றி பயணிக்க தற்போது கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ள துவாரகா  விரைவுச்சாலை வரை மெட்ரோ இணைப்பை நீட்டிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டம் முழுமையாக உருவாக்கப்பட்டு சுமார் ரூ.5452 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த மெட்ரோ பாதையானது  “28.5 கிலோமீட்டர் நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

BSNL நிறுவனத்தை மேம்படுத்த ரூ.89,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டு தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • BSNL நிறுவனத்தின் சமபங்கு உட்செலுத்துதல்(equity infusion) மூலம் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு திறனை மேம்படுத்த மொத்தமாக 89 ஆயிரத்து 47 கோடி மதிப்பிலான மூன்றாவது மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம், BSNL ஆனது இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க முடியும் என்றும் இதன் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களில் 4G சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச மெட்டா நிறுவனம் மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது இணைந்து “Amrit Generation” முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் (MWCD) ஸ்மிருதி இரானி, சர்வதேச மெட்டா நிறுவனத்துடன் இணைந்து ஜூன் 07 அன்று “அம்ரித் தலைமுறை” (Amrit Generation)என்ற முன்னெடுப்பு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த முயற்சி 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கற்பனைத்திறனை எதிர்காலத்திற்கான ஆர்வத்தையும் கனவுகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பானது ஒரு தளமாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நியாய விகாஸ் போர்டல்” அறிமுகம்.
  • நீதித்துறையின் மத்திய நிதியுதவித் திட்டம் (CSS), நீதித்துறை உள்கட்டமைப்புக்கான சட்ட வரைவுகள் மற்றும் நீதித்துறை உள்கட்டமைப்பு திட்டங்களை சிறப்பாக வழங்குவதற்காக வெளிப்படையான இணைய போர்ட்டல் சேவையை NRSC இன் தொழில்நுட்ப உதவியுடன், இஸ்ரோவானது “நியாய விகாஸ்” என்ற வலைதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் இணைய முகப்பு https://bhuvan-nyayavikas.nrsc.gov.in என்பதாகும். இந்த போர்ட்டல் மூலம் வெளிப்படையான சேவையை பயனாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிலக்கரி திட்டத்தை ஆய்வு செய்யும் திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜூன் 07 அன்று, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது(CCEA), 2021-22 முதல் 2025-26 வரை 2980 கோடி ரூபாய் செலவில் “லிக்னைட் மற்றும் நிலக்கரி ஆய்வு”செய்வதற்கான மத்தியத் துறைத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், லிக்னைட்மற்றும் நிலக்கரிகளுக்கான ஆய்வானது (i) பிராந்திய ஆய்வு மற்றும் (ii) நிலக்கரி இந்தியா நிறுவனம் அல்லாத தொகுதிகளில் விரிவான ஆய்வு என இரண்டு பரந்த நிலைகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

வங்கதேசம் மற்றும் உலக வங்கி இடையே விவசாய வளர்ச்சி மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இரண்டு நிதி சார்ந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வங்கதேசம் மற்றும் உலக வங்கி(IMF) இடையே ஜூன் 07 அன்று காலநிலை, விவசாய வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மொத்தம் “858 மில்லியன் அமெரிக்க டாலர்”மதிப்பிலான இரண்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஊட்டச்சத்து, தொழில்முனைவு மற்றும் விவசாய மேம்பாடு, கிராமப்புற மாற்றத்திற்கான 500 மில்லியன் டாலர் திட்டம் (PARTNER)  மற்றும் நாட்டின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த USD 358 மில்லியன் சாலைப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை இந்த நிதி மேம்பாட்டு ஒப்பந்தங்களில் அடங்கும் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

மாநில செய்திகள்

பாட்னாவில் G20 தொழிலாளர் ஈடுபாட்டுக் குழுவின் இரண்டு நாள் உச்சி மாநாடு நடத்த திட்டம்.
  • ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் “G20 தொழிலாளர் ஈடுபாட்டுக் குழுவின்” இரண்டு நாள் உச்சி மாநாடு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. , ‘One Earth, One Family, One Future’ என்ற கருப்பொருளை மேம்படுத்துவதற்கான உத்தகிகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் மாநில கலாச்சாரம், கலை மற்றும் இளைஞர் துறையானது இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது எனவும் பீகார் மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவின் நட்சத்திர ஏவுகணை அக்னி பிரைம் சோதனை ஓட்டத்தில் வெற்றி.
  • புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி பிரைம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) ஜூன் 07 அன்று மாலை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக பறக்கும் சோதனையில்(Flight test) வெற்றி பெற்றுள்ளது.
  • இந்த ஏவுகணையானது இந்தியாவின் நட்சத்திர ஏவுகணைகளில் (Most Capable) ஒன்றாகும். இது இரட்டை வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் அமைப்புடன் இயங்கக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது அக்னி ஏவுகணை வரிசைகளில் ஆறாவது ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ககன்யான் திட்டத்துக்கான “குழு மீட்பு மாதிரிகளை” உருவாக்க டாடா எல்க்ஸி நிறுவனமானது இஸ்ரோவுடன் இணைந்துள்ளது.
  • டாடா எல்க்ஸி நிறுவனமானது ககன்யான் திட்டத்திற்கான “குழுவினரின் பாதுகாப்பான மீட்பு சேவைக்காக” இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது விண்வெளிப் பயணத்தின் போது “மீட்புக் குழுப் பயிற்சிக்காக குழு அமைப்பின் பாதுகாப்பு உபகரணங்களை (CMRM) வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
  • இஸ்ரோவின் ககன்யான் திட்டமானது, மூன்று நாள் பணிக்காக ஒரு குழுவினரை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் செலுத்தி, பின் வேலை நிறைவு செய்த பின்னர் இந்தியப் பெருங்கடல் நீரில் தரையிறக்கும் பொது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான  அமைப்பை இந்த நிறுவனம் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரங்கல் செய்திகள்

இந்திய முதன்மை ஆங்கில செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் மறைவு.
  • தேசிய தூர்தர்ஷனின் ஒளிபரப்பாளரான மற்றும் “இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில்” ஒருவரான கீதாஞ்சலி ஐயர்(வயது-71) ஜூன் 07 அன்று உடல்நல குறைவினால் காலமானார்.
  • இவர் நான்கு முறை “சிறந்த தொகுப்பாளர்” விருதையும்  1989 இல் சிறந்த பெண்களுக்கான “இந்திரா காந்தி பிரியதர்ஷினி” விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Important day/முக்கிய தினம்

உலக மூளைக் கட்டி தினம் 2023
  • உலகின் ஆபத்தான நோய்களில் ஒன்றான மூளைக் கட்டி நோயைப் பற்றி தனிநபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 8 அன்று உலக மூளைக் கட்டி தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. மூளையைச் சுற்றி வளரும்  அசாதாரண வளர்ச்சியானது மூளைக் கட்டி எனப்படுகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!