NEET-PG தேர்வு தேதி 2023 – வெளியான முக்கிய அறிவிப்பு!
மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NMEMS) 2023 ஆம் ஆண்டுக்கான NEET-PG தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப செயல்முறைகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்துள்ளது.
NEET-PG 2023 தேர்வு:
NEET PG நுழைவுத் தேர்வு நாட்டின் மருத்துவ MD, MS அல்லது முதுகலை டிப்ளமோ படிப்புகளில் நுழைவதற்காக நடத்தப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலால் (MCI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட MBBS பட்டப்படிப்பு (provisional or permanent) சான்றிதழைப் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வானது மார்ச் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாக NMEMS தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையினருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் – ஊக்கத்தொகை வழங்க முடிவு!
மேலும் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான பதிவுகள் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் என்ற வெளியான செய்தித்தாள் அறிவிப்பு உண்மை இல்லை என்றும், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. NEET PG 2022 நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும், இது தொடர்பாக NBEMS இணையதளமான https://natboard.edu.in இணைய முகவரியை மட்டும் அணுக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.