Amazon: 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்…மீண்டும் புதிய பணியாளர்களை நியமிக்க முடிவு!!
Amazon நிறுவனம் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்ததால் திறமையற்ற பணியாளர்களை பணி நீக்கம் செய்து வந்தது. இந்த நிலையில் அந்நிறுவனம் புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பணியமர்த்தல்:
உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் திறமையற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் Amazon நிறுவனம் லாபம் தரும் ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தது. இந்நிறுவனம் இதுவரை சுமார் 10000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது போன்று இனி வரும் காலங்களிலும் திறமையற்ற பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது. அத்துடன் உணவு விநியோகம் போன்ற சேவைகளை நிறுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று வருகிறது.
தமிழகத்தில் 40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி – வெளியான சூப்பர் தகவல்!!
Exams Daily Mobile App Download
அதனால் நிறுவனத்திற்கு Cloud unit-க்கான பணியாளர்களை நியமிக்க உள்ளது. மேலும் இது தொடர்பாக இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அடுத்த ஆண்டு புதிய பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 1 மாத காலமே இருப்பதால் விரைவில் புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை Amazon வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.