South Indian Bank வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு | மிஸ் பண்ணிடாதீங்க!
சவுத் இந்தியன் பேங்க் (SIB) ஆனது காலியான Sales Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (21.11.2022) கால அவகாசம் முடியவுள்ளது.
பணி சம்மந்தப்பட்ட விவரங்கள்:
- SIB-யில் சேல்ஸ் மேனேஜர் பதிவிற்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மேலும் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சம்மந்தப்பட்ட பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 மற்றும் 55 ஆண்டுகள் ஆகும்.
- Shortlisting மற்றும் இன்டர்வியூ மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
Hero MotoCorp நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ரூபாய் 100 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் இந்த South Indian Bank வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். நாளை (21.11.2022) இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.