இந்தியாவில் தங்கம் & சமையல் எண்ணெய் விலை குறைய போகிறதா? காரணம் இதோ!

0
இந்தியாவில் தங்கம் & சமையல் எண்ணெய் விலை குறைய போகிறதா? காரணம் இதோ!
இந்தியாவில் தங்கம் & சமையல் எண்ணெய் விலை குறைய போகிறதா? காரணம் இதோ!
இந்தியாவில் தங்கம் & சமையல் எண்ணெய் விலை குறைய போகிறதா? காரணம் இதோ!

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இதன் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போது விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்து வந்துள்ளது. தங்கம் மட்டுமல்ல மற்றொரு அத்தியாவசிய பொருளின் விலையும் குறைய உள்ளது.

விலை குறைவு:

இந்தியாவில் கடந்த வருடத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலை சரிய தொடங்கியது. அதனால் மக்கள் அன்றாட பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதற்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின் விளைவால் சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய், தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்தது.

தமிழகத்தில் நாளை (செப்.17) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி தவிர்க்க முடியாதது. இந்த நேரத்தில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. அதனால் இந்தியாவில் இதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தங்கம் ஒரு சவரன் ரூ.38,000 ஐ தாண்டி உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சற்று சரிவை சந்தித்து வருகிறது. ஏனெனில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து இந்திய அரசும் அடிப்படை விலையினை குறைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1500 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்கள், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை விலைகளை மாற்றியமைத்து வருகிறது. இந்த நிலையில் டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்யின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!