CBSE வாரியத் தேர்வு 2023 – நாளை மறுநாள் முதல் பதிவு தொடக்கம்! விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடப்பு கல்வியாண்டுக்கான வாரிய தேர்வுக்கான தேதியை அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர செயல்படவில்லை. அதனால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதே போல் சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்பு கடந்த ஆண்டு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு இரண்டு பருவங்களாகப் பிரித்து நடைபெற்றது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் இரண்டு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் வழக்கம் போல் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி அன்று பொதுத்தேர்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
1. இதற்கு முதலில் cbse.gov.in என்ற சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய பக்கம் ஒன்று காண்பிக்கப்படும்.
JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!
Exams Daily Mobile App Download
3. இப்போது “continue” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது மீண்டும் புதிய பக்கம் தோன்றும்.
4. இதையடுத்து “examination form link” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
5. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
6. அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்த பிறகு “submit” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
7. இப்போது உங்களின் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்