தமிழகத்தில் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் – அமைச்சர் அதிரடி!
தமிழகத்தில் விடுமுறை நாட்களின் போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சிறப்பு குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். மேலும், அடுத்த விடுமுறையின் போது இந்த சிக்கல் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் கட்டணம்
விடுமுறை நாட்கள் என்றாலே தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதனால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். அப்போது, ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இரட்டிப்பாக கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனால், பயணிகள் பலரும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து, இந்த வாரமும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 10 நாட்கள் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!
இதனால், இந்த வாரமும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளில் இஷ்டம் போல டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிகாரிகள் அனைவர்க்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கண்காணிப்பில் அதிக கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பேருந்துகளிலிருந்து மொத்தமாக ரூ.68,090 பணம் வசூலிக்கப்பட்டு அந்த பணம் திரும்ப பயணிகளிடமே கொடுக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கரணங்களுக்காக ஆம்னி பேருந்துகளிலிருந்து ரூ.11.04 லட்சம் வரைக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு தொடர் விடுமுறை அக்டோபர் மாதம் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது அளிக்கப்படும். கண்டிப்பாக அந்த விடுமுறையின் போது கூடுதல் கட்டணம் சிரமம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்