பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 10 நாட்கள் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!

0
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 10 நாட்கள் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 10 நாட்கள் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 10 நாட்கள் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடுமுறை அறிவிப்பு

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் மக்கள் விரும்பும் நல்ல அரசனாக இருந்து நாட்டை ஆண்ட பெருமை மகாபலி சக்ரவர்த்தியை சேரும். மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம் திருமால் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்ட போது, ஆண்டு தோறும் பூலோகம் வந்து என் மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டாராம். இந்த வாரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் மகாபலி மன்னர் தன் மக்களை வந்து பார்க்க வருவார் என்பது மக்களின் ஐதீகம்.

Blue Tik வராமல் WhatApp செய்தியை படிப்பது எப்படி? முழு விவரங்கள்!

இப்பண்டிகை கேரளாவில் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் மகாபலி சக்கரவர்த்தி மன்னரை வரவேற்கும் வண்ணம் அனைவரது வீட்டு வாசலிலும் பூக்களால் கோலமிட்டு அலங்கரிப்பர். இப்பண்டிகை கேரளா மட்டுமில்லாது தென் தமிழக மக்களும் விமர்சையாக கொண்டாடுவர். அன்றைய தினம் பாரம்பரிய உடை அணிந்தும் பல வகையான உணவுகளை உண்டும் மக்கள் மகிழ்வர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 6 ஆம் தேதி கனகக்குன்னு அரண்மனை மைதானத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி அரங்கில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!