ஆதார் கார்டில் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு அவசியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் இதிலுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறான விவரங்கள் இருந்தால் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஆதார் கார்டு
இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அதன்படி ஆதரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்டவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் உள்ளிட்டவை சரியானதாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் இதோ!
அதன்படி இந்த தகவல்களும் தங்களின் பான் அல்லது இது போன்ற அரசின் ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபாடின்றி சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் உங்களின் விவரங்கள் சரியானதாக இல்லையெனில் UIDAI ஆணையம் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகிறது. ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட வரம்புக்கு மேல் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. அதாவது பெயர் மாற்றத்தை 2 முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதிலும் இதில் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும். இது போன்று அனைத்து விவரங்களையும் திருத்த சில வரம்புகள் உள்ளது.
Exams Daily Mobile App Download
திருத்துவதற்கான வழிமுறைகள்
1. ஆதரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் முறையில் திருத்தி கொள்ளலாம்.
2. ஆனால் மேற்கண்ட விவரங்களை தவிர மற்ற விவரங்களை திருத்த ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
3. ஆதார் சேவை மையத்திற்கு சென்று தங்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. அதன்பின், proceed to Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
5. இதையடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
6. அதன் பிறகு கேப்ட்சா குறியீடு பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
7. இறுதியாக இந்த OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
I will change my name in third time. Please update my name. It’s my eid no 27261222541699 .
Hi
Subham behera