ரூ.20,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (University of Madras) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Guest Lecturer பணியிடம் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (02.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Guest Lecturer பணிக்கென 04 பணியிடங்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (University of Madras) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Physics/ Material Science பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் (02.08.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.