TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவு, கட் ஆப் மதிப்பெண் குறித்த முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வின் முதல் நிலைத்தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியானது. இந்த நிலையில் எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
TNPSC குரூப் 2, 2A:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது. வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2,2A தேர்வின் முதல் நிலை தேர்வு கடந்த 21ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். அதனை தொடர்ந்து கடந்த வாரம் குரூப்2,2A முதல் நிலை தேர்வின் விடைக்குறிப்பு, கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
Exams Daily Mobile App Download
மேலும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குரூப் 2, 2A தேர்வின் முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என்றும் முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2023 ஜனவரி மாதம் கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வில் பங்கேற்க முடியும்.
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? 9494 காலிப்பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு வெளியீடு!
முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கு அடுத்ததாக தனிநபர் நேர்காணல் நடத்தப்படும். இதில் தேர்வர்களின் ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் போன்றவை சரியானதா என்பது சரிபார்க்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் WHATS NEW” என்பதை கிளிக் செய்து TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்யவும். இதில் விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகளுக்கான இணைப்பு காணப்படும். பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து தேர்வு முடிவை காணலாம்.