TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? 9494 காலிப்பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு வெளியீடு!

0
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? 9494 காலிப்பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? 9494 காலிப்பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? 9494 காலிப்பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இத்தேர்வு எப்போது நடத்த உள்ளது என்று தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்புகள் வெளியானது. அதன்படி இத்தேர்வுக்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனை விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாகவும் அத்துடன் தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோர் ரூ.250 கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதில் சர்வர் பிரச்சனை காரணமாக விண்ணப்பத்தார்களால் பதிவு செய்ய முடியவில்லை. அதனால் கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு மூலமாக பள்ளிகளில் காலியாக உள்ள 9494 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு – பெற்றோர்கள் அதிருப்தி!

இதற்கிடையே அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை எழுத்து தேர்வாக நடைபெற்று வந்த ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக கணினி வசதிகள் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இத்தேர்வு நடப்பாண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here