Oracle தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க…!
ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Software Developer and Financial Analyst பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவன அறிவிப்பில் Software Developer மற்றும் Financial Analyst பதவிகளுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முன் அனுபவம் இல்லாத அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Software Developer பாணிக்கு IMS, VoLTE மற்றும் RCS போன்றவற்றில் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து அந்த பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Working on Embedded Systems with Linux / RTOS, and conversant with Multi-Processor, Switching with Configuration and debugging skills is desirable போன்ற திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.