பாரதிக்கு முன் வெண்பாவை வச்சு செய்த கண்ணம்மா- ப்ரோமோ ரிலீஸ்! அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
நெட்டிசன்களுக்கு தவறாது வேலை கொடுத்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கு முன் வெண்பாவை கண்ணம்மா கலாய்க்கும் படியான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி சீரியல்களில் அதிக விமர்சனங்களை பெற்று வரும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடர் தான் என்று சொல்லும் அளவுக்கு சமீபத்திய எபிசோடுகள் உள்ளது. சீரியல் தொடங்கிய காலத்தில் ஓரளவு ஆதரவை பெற்றாலும், கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே சென்ற காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் விமர்சனங்களோடு கூடிய ரீச் பெற்றது. அதை தக்க வைத்துக்கொள்ளாத பாரதி கண்ணம்மா சீரியலை தற்போது லாஜிக்கே இல்லாமல் ட்ராக் மாற்றி மாற்றி கொண்டு சொல்கிறார் இயக்குனர்.
இதற்கு மத்தியிலும் அதில் நடிக்கும் நட்சத்திரங்களை பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு இயக்குனர் சொல் தட்டாது சிறப்பாக ஒவ்வொருவரும் அவர்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்காக ரசிகர்கள் பார்க்கும் நிலையில் தான் தற்போது இந்த தொடரின் நிலைமை உள்ளது. ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பாகி அட போங்கடா! என்று சலித்து கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மாறிவிட்டனர். தற்போது கதையின் ட்ராக்கை புதிதாக குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமி மீது திருப்பி எபிசோடுகளை கொண்டு செல்கிறார் இயக்குனர்.
இந்நிலையில் இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெண்பா அவருக்கு பார்த்து வைத்திருக்கும் காதல் மாப்பிள்ளை சாரதியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் ஒருவர் உயிருக்கு போராடுவதை பார்க்கின்றனர். அதை பார்த்த இருவரும் காரில் இருந்து இறங்கி அவரை காப்பற்ற நினைத்து சாரதி அந்த நபரை தூக்கி காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். எதிர்பாராத விதமாக பாரதியும் கண்ணம்மாவும் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைத்து பார்க்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது வெண்பாவை நோக்கி வந்த கண்ணம்மா வெண்பாவிடம் வெளியே புன் சிரிப்புடனும், மனதுக்குள் நக்கலுடனும் கலாய்க்கிறார். அந்த சமயம் பார்த்து பாரதி வருகை தர வெண்பா ஷாக் ஆகிறார். உடனே பாரதியிடம் கண்ணம்மா இவங்க யாருனு நீங்க கேக்கவே இல்லையேன்னு சொல்ல, சாரதியும் வெண்பாவை அணைத்தவாறு “பை த வே இவதான் என்னோட வைஃப்” என்று சொல்கிறார். இதை கேட்ட கண்ணம்மாவுக்கு ஒரே ஜாலி தான். இந்த பக்கம் வெண்பா திருதிருவென பாரதியை பார்த்து முழிக்கிறார்.