BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
BOB Financial Solutions Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள AVP / Manager-IT பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BOB Financial Solutions Limited நிறுவனத்தில் AVP / Manager-IT பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 12 ஆண்டுகளும், Post Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 08 ஆண்டுகளும் கட்டாயம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- 08.06.2022 தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்பட்டு, அவர்கள் மட்டும் அடுத்தக்கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின் திறமையான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.