BOB வங்கியில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை – நேர்காணல் மட்டும்..!
தற்போது BOB Financial Solutions Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, AVP / Manager-IT பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | BOB Financial Solutions Limited (BFSL) |
பணியின் பெயர் | AVP / Manager-IT |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB Financial காலிப்பணியிடம்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BOB Financial Solutions Limited நிறுவனத்தில் AVP / Manager-IT பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
BFSL கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் banking, finance, IT systems பாடப்பிரிவில் MBA / PG டிகிரி முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு என்று அறிவித்துள்ளது.
BOB Financial அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 12 ஆண்டுகளும், Post Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 08 ஆண்டுகளும் கட்டாயம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
BFSL வயது விவரம்:
08.06.2022 தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
BOB Financial ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
BFSL தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்பட்டு, அவர்கள் மட்டும் அடுத்தக்கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின் திறமையான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BOB Financial விண்ணப்பிக்கும் முறை:
தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து 08.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.