ரூ.31,000 ஊதியத்தில் வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள SRF, JRF பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி SRF, JRF பணிக்கென மொத்தம் 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Senior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in Agrl. Extension) / M.Sc in Agrl. Economics / M.Tech in Agrl. Engineering முடித்திருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.