ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளில் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளப் போகும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழா நடைபெற இருக்கிறது. அந்த பிறந்தநாள் விழாவில் ராதிகாவிடம் கோபி மாட்டிக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபியின் உண்மை முகம் எப்போது தான் பாக்கியாவிற்கு தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டாயப்படுத்தி தான் பாக்கியாவை கோபிக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்தும் கூட பாக்கியாவை கோபி ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது பாக்கியாவை கழட்டி விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கோபி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கு நடுவே கோபி மீது ராதிகாவிற்கும் சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. கோபி மேலும் மேலும் தவறு செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக ராதிகா கண்டுபிடித்துவிடுவார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரிந்துவிட்டால் கோபியை விட்டு ராதிகா விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. அதாவது ராமமூர்த்தி தாத்தாவிற்கு 75 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.
இதனால், ராதிகா வீட்டிற்கு சென்று பிறந்தநாளுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என பாக்கியா அழைக்கிறார். இதுமட்டுமல்லாமல் உங்களது வருங்கால கணவரையும் அழைத்து வர வேண்டும் என பாக்கியா கூறுகிறார். எப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள யாரிடமாவது கோபி மாட்டிக்கொள்ளத் தான் போகிறார். ராதிகாவை இந்த பிறந்தநாள் விழாவிற்கு வர விடாமல் தடுக்க கோபி என்னென்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்