விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டிடி வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருக்கும் டிடி இன்னும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியின் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
தொகுப்பாளினி டிடி
சின்னத்திரையில் புதுமையான கன்டென்ட் கொடுப்பதற்கு பெயர் போன சேனல் தான் விஜய் டிவி. இந்த சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் சீரியல்களும் எந்த அளவிற்கு பிரபலமானதோ அதை விட அதில் வரும் தொகுப்பாளர்களும், நடிகர் நடிகைகளும் பிரபலமாக இருக்கின்றனர். தற்போது மாகாபா ஆனந்த், அர்ச்சனா, ப்ரியங்கா என பிரபலமான தொகுப்பாளர்கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக அவருடைய பள்ளி பருவம் முதல் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
அவர் பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது காபி வித் டிடி நிகழ்ச்சி. அதில் அவர் ஏகப்பட்ட பிரபலங்களை பேட்டி எடுத்தார். அவருடைய குழந்தைத்தனமான பேச்சிற்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற ஷோக்களில் ஒன்றாக காபி வித் டிடி நிகழ்ச்சி இருக்கிறது. அதன் பின் அவர் அச்சம் தவீர், அன்புடன் டிடி, என்கிட்ட மோததே, ஸ்பீட் கெட் செட் கோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Exams Daily Mobile App Download
கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிடி அந்த நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை சொல்லும்படி அமையவில்லை. இந்நிலையில் டிடி தற்போது குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு எபிசோடிற்கு வர ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.