PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,17,500/- சம்பளம்..!
21.03.2022 அன்று Power Grid Corporation of India (PGCIL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Diploma Trainee (Civil/ Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.4.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே எளிமையாக தரப்பட்டுள்ளது.
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Power Grid Corporation of India (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Diploma Trainee (Electrical) Ladakh பணிக்கு 9 பணியிடங்கள், Diploma Trainee (Civil) Ladakh பணிக்கு 2 பணியிடங்கள், Diploma Trainee (Electrical) Kashmir பணிக்கு 5 பணியிடங்கள் என மொத்தமாக 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 3 வருடம் Diploma படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
- Discipline: Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) OR Civil Engineering
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 20.4.2022 அன்றைய நாளின் படி UR/EWS பிரிவினராக இருந்தால் 27 வயது எனவும், SC/ST பிரிவினராக இருந்தால் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,000/- முதல் ரூ.1,17,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் Computer Based Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- SC / ST / PwD / Ex-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
PGCIL விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (20.04.2022) இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.