சன் டிவி “கயல்” சீரியல் செய்த சாதனை – பரிதாப நிலையில் பாரதி கண்ணம்மா! குவியும் வாழ்த்துக்கள்!
பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் சன் டிவி கயல் சீரியல் TRPயில் பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது.
TRP சாதனை:
மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக சீரியல்கள் மாறிவிட்டது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் கின்னஸ் ரெகார்ட் செய்த பல சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இல்லத்தரசிகளின் முதல் வாய்ப்பாக சன் டிவி சீரியல்கள் இருக்கிறது. சன் டிவியில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆனால் அனைத்து சீரியல்களும் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பதில்லை. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் இந்த சீரியலில் பல எதிர்பார்ப்பு மற்றும் திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது TRPயில் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ‘சுந்தரி’ சீரியல் பிடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட முதல் வாரமே TRPயில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.