தமிழகத்தில் 400+ நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – 50,000+ காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வருகிற 20ம் தேதி அன்று வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். அத்துடன் அரசாலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியாத நிலை உருவாகியது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு பெரும்பாலோனோருக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற 20ம் தேதி அன்று வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
இம்முகாமை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடைபெற உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்களால் சுமார் 50000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இம்முகாமில் வேலையில்லா இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவு செய்யப்பட்டு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் அயல்நாட்டில் பணிபுரிய விரும்புவர்களுக்கும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவு செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் ஏதேனும் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்