விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!
பட்டிமன்ற பேச்சாளராக இருந்து தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல வேடங்களை ஏற்று நடித்து வரும் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ அதிக அளவில் லைக்குகளை பெற்று வருகிறது.
அறந்தாங்கி நிஷா:
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. ஒரு பெண் காமெடி செய்வது சாதாரண விஷயமாக இருந்தாலும், அதனை அனைவரும் விரும்பும் வகையில் செய்தது தான் நிஷாவின் தனிச்சிறப்பு. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவிற்கு பல கலைஞர்களை அளித்து உள்ளது இந்த நிகழ்ச்சி. சிவகார்த்திகேயன் முதல் தீனா வரை இதன் மூலமாக பிரபலமானவர்கள் தான்.
கண்ணம்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடக்கப் போவது இதுதான் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளராக இருந்து, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தவிர்க்க முடியாத அளவில் புகழ்பெற்றுள்ளவர் தான் நிஷா. தன்னை தாழ்த்திக் கொண்டும், மாமியார் – மருமகள், கணவன் – மனைவி போன்ற காமெடிகள் தான் இவரது வளர்ச்சிக்கு காரணம். பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராகவும் நிஷா கலந்து கொண்டார். நிஷா நிகழ்ச்சியில் அதிக நாட்கள் தாக்குப்பிடித்து இருந்தார்.
கோபியின் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்திட்ட பாக்கியா – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
நிஷாவின் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நிஷா சமீபத்தில் புது வீடு ஒன்றை கட்டி குடி பெயர்த்துள்ளார். அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன் கணவர் தனக்காக கட்டிய காதல் நினைவு சின்னம் தான் இந்த வீடு என்று நிஷா கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஷாவின் வீடியோவிற்கு அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.