SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை! மார்ச் 31 கடைசி நாள்!
SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதாருடன் பான் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். மேலும் பான் கார்டை எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு:
இந்திய அரசு வங்கி என்று அழைக்கப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் தனது ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் SBI வாடிக்கையாளர்கள் ஆதார்- பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி 30.09.2021 ஆக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இருப்பினும் கொரோனா தாக்கம் காரணமாக இந்த ஆதார்- பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31,2022 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வங்கி நிர்வாகம் “வாடிக்கையாளர்கள் அனைவரும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து வங்கிச் சேவைகளை பயன்படுத்த ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் தற்போது வரை, ஆதாருடன் பான் கார்டை இணைக்காத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இரண்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Method 1: ஆன்லைனில் இணைக்கும் வழிமுறை
1:வருமான வரித்துறை இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
2:Link Aadhar ஆப்ஷனை கிளிக் செய்ததும், புதிய பக்கத்திற்கு மாற்றப்படுவார்கள்.
3: பான் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.
4: உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், ‘I have only year of birth in aadhaar card’
என்ற விருப்பத்தை டிக் செய்ய வேண்டும்.
5: கேப்ட்சா அல்லது OTP நம்பர் Verification செய்ய வேண்டும்.
6: இறுதியாக, Link Aadhar கிளிக் செய்ய வேண்டும்.
Method 2 – SMS மூலம் இணைக்கலாம்
1: UIDPAN <12 டிஜிட் ஆதார் எண்><10 டிஜிட் பான் எண்> டைப் செய்ய வேண்டும்.
2: இந்த மெசேஜை 567678/ 56161 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
.