தாய் மாமா முறை செய்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தடைகளை தாண்டி தமிழ் மற்றும் சரஸ்வதி திருமண நாள் நெருங்கிவிட்டது. கல்யாண மெகந்தி நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதில் பல சர்ச்சைகளை சந்திரகலா கிளப்பினாலும் அதை எல்லாம் தாண்டி தற்போது திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே தமிழ் அம்மா கோதைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி தம்பி முறை செய்து இருக்கிறார். தற்போது தமிழ் சரஸ்வதி திருமணத்தில் தாய்மாமா முறை செய்ய இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் தமிழின் தாய்மாமா கையில் தாம்பூல தட்டை கொடுத்து முறை செய்ய சொல்ல,அவர் அதை பார்த்து சந்தோஷத்தில் அதிர்ச்சி அடைகிறார். பின் மேடையில் வாழ்த்துக்களை சொன்ன தனம் மோதிரம் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.
‘ராஜா ராணி 2’ சீரியலில் அர்ச்சனா பற்றிய உண்மையை கண்டு பிடிக்கும் சந்தியா – ப்ரோமோ ரிலீஸ்!
தமிழ் சரஸ்வதி காதலுக்கு தனம் பல உதவிகளை செய்து இருக்கிறார். அப்போது பேசிய கோதை தமிழ் இப்படி மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறான் என்றால் அதற்கு இந்த குடும்பம் தான் காரணம் என சொல்லி சந்தோசப்படுகிறார். அதை எல்லாம் பார்த்த சந்திரகலா கோவத்தில் முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் நாளை திருமண வைபோவம் கோலாகலமாக நடைபெறும் அதில் சந்திரகலா சரஸ்வதி படிப்பு பற்றிய உண்மையை சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.