தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய திட்டத்திற்கு வழக்கு பணியாளர் , ஓட்டுநர் / பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

பணியின் பெயர் – வழக்கு பணியாளர் : 05

விண்ணப்பதாரர் தகுதிகள் : பட்டப்படிப்பு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருத்தல் வேண்டும். மேலும் 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளர்களாக இருத்தல் அவசியம். இதனை தொடர்ந்து உள்ளூர் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர் : 02

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி பெற்றவர்கள்.

இந்த வேலைக்கு நன்கு சமைக்கத் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் மற்றும் உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம். மேலும் மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

பணியின் பெயர் – ஓட்டுநர் / பாதுகாவலர் : 01

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி அல்லது 10 வது தேர்ச்சி /தோல்வி. மேலும் மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் விண்ணப்பத்தாரராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 12.02.2022

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம் , 4வது மாடி , B பிளாக் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , சத்துவாச்சாரி , வேலூர்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலமாக 12.02.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!