விஜய் டிவியில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியல் – இன்று முதல் ஒளிபரப்பு!
விஜய் டிவியில் “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி நேற்று முதல் முடிவடைந்து உள்ள நிலையில், இன்று முதல் ஈரமான ரோஜாவே சீரியல் சீசன் 2 தொடங்க இருக்கிறது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஈரமான ரோஜாவே சீசன் 2:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. மேலும் பல சாதனைகளை செய்த முன்னணி சீரியல்கள் இருக்கின்றன. அந்த சீரியல்களில் இரண்டாம் பாகம் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் முதல் பாகத்தில் புதுமுக நடிகை, நடிகர்கள் நடித்தனர். இந்நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்கள் – ஷாக் ரிப்போர்ட்!
அதன் படி ஈரமான ரோஜாவே இரண்டாம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கேப்ரியல்லா, சித்தார்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ப்ரோமோவே புது விதமாக விறுவிறுப்புடன் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அண்ணன் அக்கா காதலிக்க, அவர்களின் தம்பியும் தங்கையும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறார்கள். முதலில் அண்ணன் அக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்ய கதாநாயகியின் அக்கா கடத்தப்படுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ரசிகர்கள் ஆரவாரம்!
அவரை மணமகனின் தம்பி காப்பாற்ற அவர்கள் மண்டபத்திற்கு வருவதற்குள் தங்கையுடன் திருமணம் செய்து வைக்கின்றனர். அதனால் இரு காதல் ஜோடிகளும் பிரிக்கின்றனர். இப்படி ப்ரோமோ வெளியான நிலையில், நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. அந்த நேரத்தில் இந்த புது சீரியல் தொடங்க இருக்கிறது. அதன் படி ஈரமான ரோஜாவே சீரியல் இன்று முதல் இரவு 10 மணிக்கு ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் இரண்டு கதாநாயகன்களும், கதாநாயகியை சந்திக்கும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.