RBI வங்கியில் மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
RBI வங்கியில் மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RBI வங்கியில் மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RBI வங்கியில் மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் சட்ட அலுவலர் கிரேடு பி, மேலாளர், நூலக வல்லுநர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வேலைவாய்ப்பு:

இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள காலியிடங்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது தேர்வு மூலம் நிரப்பி வருகின்றனர். தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில் சட்ட அலுவலர் கிரேடு பி, மேலாளர், நூலக வல்லுநர் போன்ற பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு ஜனவரி 15 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

4 பிப்ரவரி 2022 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான தேர்வுகள் மார்ச் 6 ம் தேதி அன்று நடத்தப்படும்.

காலியிடங்கள்:

மொத்தம் 14 காலியிடங்களுக்கான பதவிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

கிரேடு B-ல் சட்ட அதிகாரி: 2 பதவிகள்
மேலாளர் (டெக்னிக்கல்-சிவில்): 6 பதவிகள்
மேலாளர் (டெக்னிக்கல்-எலக்ட்ரிக்கல்): 3 பதவிகள்
கிரேடு A (நூலக வல்லுநர்): 1 பதவி
கிரேடு A (கட்டிடக் கலைஞர்): 1 பதவி
கொல்கத்தாவில் உள்ள RBI அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர்: 1 பதவி

தகுதிகள்:
  • சட்ட அதிகாரி பதவிக்கு சட்டம் தொடர்பான இளங்கலை பட்டத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 2 வருட அனுபவத்துடன் வயது வரம்பு 32 ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
  • மேலாளர் பதவிக்கு இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் BE/B.Tech குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 3 வருட அனுபவத்துடன் 21 முதல் 35 வயது வரை வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

Post Office இல் ரூ.1,411 முதலீட்டில் ரூ.35 லட்சம் வருமானம் – சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

  • மேலாளர் பதவிக்கு சிவில் இன்ஜினியரிங் பிரிவில் BE/B.Tech பட்டத்துடன் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 3 வருட அனுபவம் மற்றும் 21-35 என்ற வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
  • நூலக வல்லுநர் பதவிக்கு கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் நூலக அறிவியல் அல்லது நூலகத்தில் முதுகலை பட்டத்துடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும். 21 முதல் 30 என்ற வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
  • கட்டிடக்கலை நிபுணர் பதவிக்கு கட்டிடக்கலை பட்டதாரி பட்டதில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 21-30 வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
  • அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் பணிக்கு வரலாறு, பொருளாதாரம், நுண்கலை ஆகியவற்றில் முதுகலைப் பட்டத்துடன் 5 வருட அனுபவம் மற்றும் 25 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:

கிரேடு ‘A’ அதிகாரிகளுக்கு தோராயமாக ரூ.90,100 ம், கிரேடு ‘B’ அதிகாரிகளுக்கு தோராயமாக ரூ. 1,16,684 ம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக அரசு விதிகளின் படி அகவிலைப்படி, உள்ளூர் இழப்பீட்டு கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, சிறப்பு கொடுப்பனவு மற்றும் கிரேடு அலவன்ஸ் போன்றவையும் அளிக்கப்படும்.

விண்ணப்பம்:

பொது, OBC மற்றும் EWS பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/ PwBD மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!