‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா, லட்சுமியை கடத்தும் வெண்பா – ரசிகர்கள் ஷாக்!’
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவுடன் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் இருப்பதை போல இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக, அதுவும் 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். என்றாலும் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்து வரும் இத்தொடர் தற்போது பல ஸ்வாரசியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கம்ப்யூட்டர் சார் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
ஏனென்றால் இந்த சீரியலில் இப்போது தான் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கி இருக்கும் சமயத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ள வெண்பா, கண்ணம்மாவுக்கு எதிராக தனது வேலையே சிறப்பாக துவங்கி இருக்கிறார். அந்த வகையில் கண்ணம்மா மீதான வெறுப்பை அதிகப்படுத்தும் விதமாக பாரதியை தூண்டி விடுகிறார் வெண்பா. இதற்கிடையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி பரீனா வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
இப்போது வெண்பாவின் வருகைக்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வில்லி வெண்பாவுடன் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் இருப்பதை போல இணையத்தில் வெளியான புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஒருவேளை வெண்பா, லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் கடத்தி இருப்பாரோ என்று கணித்துள்ளனர். இருந்தாலும் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.